மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவராக திகழும் புத்ததேப் பட்டாச்சார்யா, தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பட்டாச்சார்யாவின் மனைவி உள்துறை அமைச்சக அதிகாரியிடம் விருதை ஏற்க மறுப்பதாக கூறவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்மபூஷன், 107 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தவதாக அமைந்தது.
இதனிடையே, தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதை ஏற்க விரும்பவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மேற்குவங்க முதல்வருமான புத்ததேப் பட்டாச்சார்யா மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதை சிபிஎம் கட்சியும் உறுதிப்படுத்தியது.
Also read: 2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் - பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..
இது தொடர்பாக புத்ததேப் பட்டாச்சார்யா, வங்க மொழியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்மபூஷன் விருது கொடுத்திருந்தால். நான் அதை நிராகரிக்கிறேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பட்டாச்சார்யா தற்போது மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவர் பல சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி அரசை எதிர்த்தவர்.
Also read:
காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!
இதனிடையே உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நியூஸ் 18க்கு அளித்த தகவலின்படி, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, பட்டாச்சார்யாவின் மனைவியை தொடர்பு கொண்டு பத்மபூஷன் விருது தொடர்பாக தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் பட்டாச்சார்யா விருதை ஏற்க மறுத்ததாக அப்போது அவரிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
பத்ம விருதுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விருது கொடுக்கப்படுபவர்களுக்கு அது தொடர்பாக தகவல் மட்டுமே அளிக்கப்படும், அவர்களின் ஒப்புதல் பெறப்படுவதில்லை. அதே நேரத்தில் கடந்த காலங்களில் தொலைபேசி வாயிலாக விருது தொடர்பாக கூறுகையில், அவர்கள் விருதை ஏற்க விரும்பவில்லை என தெரிவித்தால், அவர்களின் பெயர் நீக்கப்படும். ஆனால் பட்டாச்சார்யா விவகாரத்தில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசிடமிருந்து இத்தகைய விருதுகளை ஏற்கக்கூடாது என்பது சிபிஐ(எம்) கொள்கை. எங்களின் பணி விருதுகளுக்காக அல்ல மக்களுக்கானது என சிபிஐ(எம்) அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
Also read:
தகராறில் ஈடுபட்ட மனைவியை கட்டிடத்தின் 4வது மாடி லிப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்ட கணவர்!!
மேற்குவங்கத்தின் முதல்வராக 2000 முதல் 2011 வரை இருந்தவர் புத்ததேப் பட்டாச்சார்யா, இவர் சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ம் ஆண்டில் மம்தா அங்கு வெற்றி பெற்ற போது 35 ஆண்டுகால சிபிஎம் ஆட்சி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.