Home » News » National » FORMER ASSAM CHIEF MINISTER TARUN GOGOI PASSED AWAY SKD

ஆறு முறை எம்.பி: 15 ஆண்டுகள் முதல்வர் - காங்கிரஸின் மூத்த தலைவர் தருண் கோகாய் மரணம்

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்.

ஆறு முறை எம்.பி: 15 ஆண்டுகள் முதல்வர் - காங்கிரஸின் மூத்த தலைவர் தருண் கோகாய் மரணம்
தருண் கோகாய்
  • Share this:
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய்( வயது 82) கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த பிறகு, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக , கடந்த 1 ஆம் தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், அவரது உடல்நிலை கடந்த இருதினங்களுக்கு முன்னர் பின்னடைவைச் சந்தித்தது. அவருக்கு வெண்டிலேசன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி தருண் கோகாய் உயிரிழந்தார்.


காங்கிரஸின் மூத்த தலைவராக தருண் கோகாய், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் அசாம் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
First published: November 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading