முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸில் இருந்து ஆந்திரா முன்னாள் முதல்வர் விலகல்... பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்..!

காங்கிரஸில் இருந்து ஆந்திரா முன்னாள் முதல்வர் விலகல்... பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்..!

ராகுல் காந்தியுடன் கிரண் குமார் ரெட்டி

ராகுல் காந்தியுடன் கிரண் குமார் ரெட்டி

தெலங்கானா உருவாவதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் கிரண் குமார் ரெட்டி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் விரைவில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டியின் தீவிர விசுவாசியான கிரண் குமார் ரெட்டி  அன்றைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொறடாவாகவும், சபாநாயகாரகவும் இருந்தவர். ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் எதிர்பாரத விதமாக மறைந்ததை அடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக 2010இல் கிரண் குமார்  தேர்வு செய்யப்பட்டார். 2010இல் இருந்து 2014 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக கிரண் இருந்தார். பின்னர் அன்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியது.

இதற்கு ஆந்திர மாநிலத்தில் கடும் எதிர்ப்பும் போராட்டமும் நடைபெற்ற நிலையில், மாநில பிரிவினைக்கு முன்னதாக அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் பதவியை கிரண் குமார் ராஜினாமா செய்தார். எனவே, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சர் இவர் தான்.

2014இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய கிரண் குமார், 2018இல் தனது கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். சுமார் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியை நாட்டை விட்டே வீசி எறிய வேண்டும்.. சர்ச்சையைக் கிளப்பிய பாஜக எம்பி பிரக்யா சிங்

காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக குலாம் நபி ஆசாத், அனில் கே. அந்தோனி உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர்.

அதன் நீட்சியாக தற்போது ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கிரண் குமாரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், விரைவில் கிரண் குமார் டெல்லி சென்று பாஜகவின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

First published:

Tags: Andhra Pradesh, BJP, Congress