ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ள பாதிப்புகளை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்குவதற்காகக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் படகு மூலம் சந்திரபாபு நாயுடு சென்றார்.
நேற்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோம்பல்லி கிராமத்திற்கு படகு மூலம் சென்றார். கிராமத்தை நெருங்கிய நிலையில் கரையை ஒட்டி நிற்க படகில் இருந்து அவர் கீழே இறங்கினார். அப்போது அந்த படகு ஒரு பக்கமாக சாய்ந்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தண்ணீரில் விழுந்தனர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த மீனவர்கள் ஆற்றில் குதித்து , சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சி பிரமுகர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 ஓட்டுகள் செல்லாதவை.. தமிழ்நாட்டில் விழுந்த ஒரு செல்லா ஓட்டு யாருடையது?
கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 626 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உள்படப் பலரும் உயிரிழந்துள்ளனர்.முழுமையான சேத விவரம் இன்னும் சில நாள்களில் தெரியவரும் என மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.