மாரடைப்பு மற்றும் கேன்சர் நோயால் பழங்குடி மக்களுக்கு அதிகளவு மரணங்கள் ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பழங்குடியினர் அதிகமாக வாழும் 12 மாவட்டங்களில் 5292 பேரிடம் ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. அதில் தொற்று மூலம் பரவாத நோய்களால் 66 சதவீத மரணங்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மாரடைப்பு, கேன்சர், மூச்சுத்திணறல், சர்க்கரை நோயால் மரணம் அதிகளவு ஏற்படுவதாகவும், ஆய்வு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இருதய நோய்கள் தான் இறப்புகளின் முதல் காரணமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலையில் ஒழுங்கீனம்..மூன்று நாள்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர் பணியில் இருந்து நீக்கம்!
70 சதவீத பழங்குடியினர் வீட்டிலேயே உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது. சுமார் 25% பழங்குடிகள் இறப்பதற்கு முன், தங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு சிகிச்சைப் பெறவில்லை . 29 சதவீத பழங்குடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இருதய நோய்களுக்கான முக்கியமான காரணியாகும் . அதிகரிக்கும் நகரமயமாக்கலால் பழங்குடியினரும் பாதிக்கப்பட்டு வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer