• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தமிழக - கேரௗ எல்லையில் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

தமிழக - கேரௗ எல்லையில் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

தூப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர்.

தூப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர்.

தமிழக - கேரௗ எல்லைப் பகுதியான தென்மலை வனப் பகுதியில் தூப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
கேரள மாநிலம் தென்மலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இது தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் சந்தனமரங்கள், விலை உயர்ந்த அரியவகை வாசனை திரவிய மரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. யானை, சிறுத்தை புலி, மிளா, கரடி போன்ற பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் இப்பகுதி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள 4 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தென்மலை நீர்த் தேக்கத்திற்கு நீர் வழிப்பாதைகள்  உள்ளன. மேலும் இந்த நீர்த் தேக்கம் கேரள அரசின்  பாதுகாக்கப்பட்ட வனத்தில் உள்ளது.

இந்நிலையில், தென்மலையில் அடர்ந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ், சிஜீஜாய், ஷாஜி ஆகிய மூவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மயில் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டதும் நாட்டுத் தூப்பாக்கிகளுடன் உலா வந்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 6 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில் அவர்கள் வனப்பகுதியில் அரிய வகை வாசனைத் திரவிய மரங்களை வெட்டிக் கடத்த வந்தவர்களா அல்லது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களா என பல்வேறு கோணத்தில் கேரள மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: