காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு இரண்டாவது கட்டமாக ஆய்வு! பங்கேற்க மறுத்த ரஷ்யா

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு இரண்டாவது கட்டமாக ஆய்வு! பங்கேற்க மறுத்த ரஷ்யா
வெளிநாட்டு தூதர்கள் குழு
  • Share this:
காஷ்மீரில் ஆய்வு மேற்கொள்வதற்காக 25 பேரைக் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு மற்றும் மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு தூதர்கள் குழு ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் பயணம் மேற்கொண்டது. இந்நிலையில் 2வது கட்டமாக 25 பேரைக் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் பங்கேற்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், ஆய்வு மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்நாடு கூறியுள்ளது.


Also see:

 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்