வரதட்சணை கேட்டு மாமனார் முன் நிர்வாணப்படுத்தி கொடுமை: விபரீத முடிவு எடுத்த 18 வயது பெண்!

sexual abuse

திருமணம் நடைபெற்ற 20 நாட்களுக்கு பின்னர் வரதட்சணை கேட்டு அடித்து காயப்படுத்தி பிரியாவை அவரது மாமனார் , மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

 • Share this:
  வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதோடு  நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் இளம் பெண் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்தேறியுள்ளது.

  பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமைகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அண்மையில், கேரளாவைச் சேர்ந்த  விஸ்மயா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.  அதுபோன்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் தற்போது அரங்கேறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ராஜஸ்தான் மாநிலம் பாகூரை சேர்ந்தவர் பைருலால். இவரது 18 வயது மகள் பிரியாவுக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி பில்வாரா மாவட்டத்தில் உள்ள பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்ஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற 20 நாட்களுக்கு பின்னர் வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார் , மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர். பிரியாவை அடித்து காயப்படுத்தியும் உள்ளனர். இதையடுத்து பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  இதையும் படிங்க: மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பெண் மருத்துவர் வெளியிட்ட பதிவு வைரல்..


  இந்நிலையில், முகேஷ் சான்ஸி மற்றும் அவரது பெற்றோர் பிரியாவை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சில நாட்கள் சென்ற நிலையில் வரதட்சணை கொடுமை மீண்டும் தொடர்ந்துள்ளது. கடந்த ஜூலை 20ம் தேதி வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார், மாமியார் ஆகியோர் அடித்து உதைத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த பிரியா ஜூலை 22ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியா உயிர் இழந்தார்.

  மேலும் படிக்க: பெகாசஸ் உளவு விவகாரத்தில் அதிரடி காட்டிய மம்தா பானர்ஜி!


  இந்நிலையில், தனது தற்கொலைக்கான காரணம் தொடர்பாக பிரியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், வரதட்சணை கேட்டு தனது மாமனார், மாமியார் ஆகியோர் உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு தனது மாமனார் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் பிரியா கூறியுள்ளார். இதையடுத்து, பிரியாவின் கணவர், மாமனார், மாமியார் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Murugesh M
  First published: