விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மிகவும் தாமதமாகவே கணவர் புகார் அளித்திருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் திகம்நகர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னை தான் இந்த அளவுக்கு சென்றிருக்கிறது. 24 வயதாகும் அந்த பெண், 24 வயதாகும் தனது கணவரை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் சில காலம் தனித்தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
Also read: பொய் புகார் கொடுத்து 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை கலங்கடித்த இளம்பெண் - பகீர் காரணம்..
பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று மனைவியுடன் செக்ஸில் ஈடுபட கணவர் முயன்ற நிலையில் இதில் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இருப்பினும் கணவர் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவருடைய மனைவி, கணவரின் பிறப்பு உறுப்பை தனியாக துண்டித்துள்ளார்.
தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த மார்ச் மாதத்திலும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக தனது மகனுடன் இருந்த போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நபரின் பிறப்புறுப்பை தனியாக துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Husband Wife, Sex