ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த வாலிபர்... யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க திட்டம்

ராமிரெட்டி ரயில் தண்டவாளத்தில் தன்னுடைய பைக், சிலிண்டர் போன்றவற்றை வைத்து ரயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலானது.

news18
Updated: August 11, 2019, 1:57 PM IST
ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த வாலிபர்... யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க திட்டம்
ராமிரெட்டி ரயில் தண்டவாளத்தில் தன்னுடைய பைக், சிலிண்டர் போன்றவற்றை வைத்து ரயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலானது.
news18
Updated: August 11, 2019, 1:57 PM IST
யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பட்டாசு, சைக்கிள் செயின் ,பைக் போன்றவற்றை வைத்து வீடியோ எடுத்த வாலிபர் கைது.

சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் ஏற்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்தவர் ராமிரெட்டி. பிடெக் படித்துள்ள ராமிரெட்டி ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்த ராமிரெட்டி பார்வையாளர்களை அதிகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பட்டாசு, சைக்கிள் செயின் ,பைக் போன்றவற்றை வைத்து வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

அவர் ரயில் தண்டவாளத்தில் தன்னுடைய பைக், சிலிண்டர் போன்றவற்றை வைத்து ரயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலானது.இந்த வீடியோ பதிவை வைத்து விசாரணை நடத்திய ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வண்டி பதிவு எண்ணை வைத்து ராமிரெட்டியை கைது செய்தனர்.இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிலையில் யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் ராமிரெட்டி. இதற்காக பொம்மைகள், கோழி, சைக்கிள் செயின், கேஸ் சிலிண்டர், பைக் போன்ற பல்வேறு பொருள்களை ரயில்வே தண்டவாளத்தில் வைத்து ரயில் வரும் வரை காத்திருப்பார். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மீது ரயில் ஏறி செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் 43 முறை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் சைக்கிள் செயினை தண்டவாளத்தில் வைத்து வீடியோ எடுத்த போது சைக்கில் செயின் ரயில் சக்கரத்தில் சிக்கி இருந்தால் ரயில் கவிழ்ந்திருக்கும். தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்திருந்தால் ரயில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்க கூடும். எனவே ராமிரெட்டி மீது 153, 147 ஆகிய பிரிவுகளில் ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Also watch

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...