ஹோம் /நியூஸ் /இந்தியா /

சீன மொழி தெரிந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. சீனாவுக்கு பதிலடி..

சீன மொழி தெரிந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. சீனாவுக்கு பதிலடி..

சீன மொழி நிபுணர்களுக்கு ராணுவத்தில் வேலை

சீன மொழி நிபுணர்களுக்கு ராணுவத்தில் வேலை

Indian Army Jobs : சீன மொழி தெரிந்த 18 வயது முதல் 42 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியா - சீனா எல்லையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரபரப்பு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையான லடாக் LAC-Line of Actual Control பகுதியில் இரு நாட்டு வீரர்களும் 2020ஆம் ஆண்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இரு நாட்டு வெளியுறவுத்துறை, ராணுவ தலைமைகள் பல்வேறு கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை விலக்கும் முயற்சியில் இரு நாடுகளும் பேசி வருகின்றன.

அதேவேளை, எல்லை பகுதியை பலப்படுத்த இரு நாடுகளும் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. அதன்படி, கடந்த மே மாதத்தில் சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தி மொழி தெரிந்த நபர்களை ராணுவ பணிக்கு எடுக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்தி தெரிந்த நபர்கள் எல்லையில் பணியில் இருப்பது சீனா ராணுவத்திற்கு பல்வேறு விதத்தில் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்த நகர்வை சீனா மேற்கொண்டுள்ளது.

இதற்கு பதில் தரும் விதமாக இந்திய ராணுவமும் தற்போது புதிய நகர்வை மேற்கொண்டுள்ளது. அதன்படி, எல்லையில் ராணுவத்தில் பணியாற்ற சீன மொழி(Mandarin) தெரிந்த நபர்களை வேலைக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 வயது முதல் 42 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக ஆறு பேர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களுக்கும் சீனா மொழி அதன் எழுத்துக்கள் தொடர்பான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரபல யூடியூபர் கைது

இந்த முடிவு தொடர்பாக இந்திய ராணுவ தரப்பு கூறுகையில், எல்லை பாதுகாப்பில் சீன மொழி நிபுணர்களை பணியமர்த்துவதற்கான ஒப்புதல் சமீபத்தில் தான் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வடக்கு எல்லை ராணுவத்தை பலப்படுத்த வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. காலத்தின் தேவைக்கு ஏற்ப சீன வீரர்களை எதிர்கொள்ள இந்த யுக்தியானது பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Army jobs, India vs China, Indian army