யாருக்கு ஓட்டுப் போட்டாலும் தாமரைக்குத் தான் பதிவாகும்! ராகுல் காந்தி பதிவிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ வீடியோ

நேர்மையான பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு ஓட்டுப் போட்டாலும் தாமரைக்குத் தான் பதிவாகும்! ராகுல் காந்தி பதிவிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ வீடியோ
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: October 21, 2019, 5:10 PM IST
  • Share this:
யாருக்கு வாக்களித்தாலும், பா.ஜ.கவுக்குத் தான் வாக்கு விழும் என்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ பக்ஷிஸ் சிங்கின் வீடியோவை ராகுல் காந்தி அவருடயை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காலையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் பா.ஜ.க எம்.எல்.ஏ பக்ஷிஷ் சிங், ‘நீங்கள், யாருக்கு வாக்களித்தாலும், அதனை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். எங்களுக்குத் தெரியாது என்று நினைக்கவேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே உங்களிடம் சொல்வதில்லை, ஆனால், எங்களுக்குத் தேவையென்றால், நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.


பக்ஷிஷ் சிங்


ஏனென்றால், மோடி மிகவும் அறிவாளி. அதேபோல, மனோகர்லால் கட்டாரும் அறிவாளி. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப் போடுங்கள், அது தாமரைக்குத் தான் வாக்குப் பதிவாகும்’ என்று பொதுமக்கள் முன்னிலையில் பேசியுள்ளார். நேர்மையான பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்ஷிஷ் சிங்கிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க மோசடி செய்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் எம்.எல்.ஏவின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Also see:

First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading