Home /News /national /

பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பாஜகவினர் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பாஜகவினர் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

PM Modi

PM Modi

PM Modi Security Breach: பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பாஜகவினர் கோவில்களில் விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி கோவில்களில் பாஜகவினர்  பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பஞ்சாபில் 42,750 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நேற்று (ஜனவரி 5) மதியம் பிரதமர் மோடி பதிண்டாவில் இருந்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்ற போது வழியில் திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவருடைய பயணத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கக் கூடிய நாட்டின் உச்சபட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கக் கூடிய பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாட்டை ஏற்படுத்திய பஞ்சாப் மாநில அரசு மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால், பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், நாடு முழுவதும், பாஜகவினர் கோவில்களில் விஷேச பூஜைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.



    பாஜகவின் தேசிய துணைத் தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள குஃபா கோவிலுக்கு நேரில் சென்று 108 வேத விற்பன்னர்களுடன் சேர்ந்து மஹாமரியுஞ்சய மந்திரத்தை உச்சரித்தார். அவருடன் திரளான பாஜகவினரும் மந்திரத்தை ஒலித்தனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த மந்திரத்தை வேத விற்பன்னர்கள் உச்சரிப்பார்கள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. இதே போல உஜ்ஜய்னியில் மகாகாளேஸ்வர் ஜோதிர்லிங்க கோவில், காந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வரர் திருக்கோவில் என மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பாலான கோவில்களில் பிரதமருக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.



    டெல்லியில் உள்ள ஜந்தேவாலன் திருக்கோவிலில் பாஜகவின் தேசிய துணைத்தலைவர் பைஜயந்த் பாண்டா பிரதமருக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.

    தமிழகத்திலும் பாஜகவினர் மெலுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமும், கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Narendra Modi

    அடுத்த செய்தி