ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாப்பாடு வேண்டாம்... 50 ஆண்டுகள் திரவ உணவை மட்டும் குடித்து உயிர் வாழும் அதிசய மூதாட்டி!

சாப்பாடு வேண்டாம்... 50 ஆண்டுகள் திரவ உணவை மட்டும் குடித்து உயிர் வாழும் அதிசய மூதாட்டி!

மேற்கு வங்க மூதாட்டி அனிமா சக்ரபூர்த்தி

மேற்கு வங்க மூதாட்டி அனிமா சக்ரபூர்த்தி

இளமையில் தனது தாய் சந்தித்த வறுமையே அவரின் இந்த தனித்துவமான வாழ்க்கை முறைக்கு காரணம் என்கிறார் மூதாட்டி அனிமாவின் மகன்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்க மாநிலத்தில் 76 மூதாட்டி ஒருவர் சுமார் 50 ஆண்டுகள் சாப்பாடு சாப்பிடாமல் உயிர் வாழ்கிறார். இவர் கடந்த 50 ஆண்டுகளாக டீ, ஹார்லிக்ஸ் போன்ற திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உடல் நலத்துடன் உயிர் வாழ்ந்து வருகிறார்.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் பெல்திஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் 76 வயது மூதாட்டி அனிமா சக்ரபூர்த்தி. மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அனிமா தனது இளம் பிராயத்தில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு வருவாய் ஈட்டியுள்ளார். திருமணமாகி குழந்தைகள் பிறந்த நிலையில், வேலைக்கு செல்லும் வீட்டில் கிடைக்கும் உணவுகளை குழந்தைகள் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு கொடுத்து விடுவாராம்.

தான் வெறும் டீ, சத்தான திரவ பானங்களை மட்டுமே உண்டுள்ளார். இப்படி பழகி நாளடைவில் அனிமா சாப்பாட்டு உணவுகளை சாப்பிடுவதையே விட்டுவிட்டாராம். கடந்த 50 ஆண்டுகளாக இவர் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு நலமுடன் இருப்பதை பார்த்து இவரது குடும்பம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிராமமும் ஆச்சரியப்படுகிறது.

இளமையில் தனது தாய் சந்தித்த வறுமையே அவரின் இந்த தனித்துவமான வாழ்க்கை முறைக்கு காரணம் என்கிறார் மூதாட்டி அனிமாவின் மகன். இந்த பாட்டியின் உடல் இயக்கம் குறித்து ஹூக்ளி மருத்துவர் பிலேஸ்வர் பல்லவ் கூறுகையில், "நமது உடலுக்கு ஆற்றல், கலோரி மற்றும் சத்துகளுக்கான தேவையை சாப்பாடு போன்ற உணவு மட்டுமல்லாது திரவ உணவிலும் பெறலாம். என்ன சாப்பிடுகிறோம் என்பது அல்ல. அதில் தேவையான சத்து இருக்கிறதா என்பதே முக்கியம்.

இதையும் படிங்க: ஸ்விக்கி பையுடன் 20 கிமீ நடை.. குடும்பத்தை தனி ஒருத்தியாய் காப்பாற்றும் நம்பிக்கை தாயின் கதை!

அதை திரவ உணவில் பெறமுடிந்தாலே அந்த நபர் நலமுடன் வாழலாம். கோமா அல்லது ஐசியூவில் இருக்கும் நோயாளிகள் எல்லாம் கடினமான சூழலில் திரவ உணவை சாப்பிட்டுதான் உயிர் வாழ்கிறார்கள். எனவே, மூதாட்டியின் உடல் நலத்தை பார்த்து அறிவியல் ரீதியாக ஆச்சரியப்படத் தேவையில்லை" என்கிறார்.

First published:

Tags: Food, Viral News, Woman