• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பாஜகவுக்கே பதற்றம் ஏற்படுத்திய அமித் ஷாவின் பேச்சு- யோகி ஆதித்யநாத் வெற்றியை நம்பியா மோடியின் வெற்றி?

பாஜகவுக்கே பதற்றம் ஏற்படுத்திய அமித் ஷாவின் பேச்சு- யோகி ஆதித்யநாத் வெற்றியை நம்பியா மோடியின் வெற்றி?

அமித் ஷா

அமித் ஷா

கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த அமித் ஷா, 2024-ல் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமெனில் உ.பி.யில் ஆதித்யநாத் மீண்டு முதல்வராக வேண்டும் என்று பேசியுள்ளார்.

 • Share this:
  கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த அமித் ஷா, 2024-ல் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமெனில் உ.பி.யில் ஆதித்யநாத் மீண்டு முதல்வராக வேண்டும் என்று பேசியுள்ளார்.

  அதாவது, 2024-ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்றால், 2022-ல் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக்கப்பட வேண்டும் என்று பேசினார் அமித் ஷா. இது பாஜக மேலிடம் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை சிக்கலாக பாஜக ஊடகப்பிரிவினர் உடனடியாக பத்திரிகையாளர்களைக் கூட்டி அமித் ஷா பேசியதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் அல்லது அதை மழுங்கடித்து விடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

  கணக்கு ரீதியாகப் பார்த்தால் உ.பி.யில் 80 லோக்சபா சீட்கள் உள்ளன. இதை அப்படியே அள்ள 2022-ல் யோகி ஆதித்யநாத் முதல்வராவது கட்டாயம் என்ற ரீதியில் அமித் ஷா பேசியிருக்கலாம். ஆனால் அமித் ஷாவின் பேச்சு மக்களிடையே எப்படிப் புரிந்து கொள்ளப்படும் எனில் ஏதோ மோடியின் வெற்றி ஒரு மாநில முதல்வராகும் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை நம்பியிருக்கிறது என்றால் யாருக்கு செல்வாக்கு என்ற ரீதியில் போகும் என்பதை பாஜக புரிந்து கொண்டு பதற்றமடைந்துள்ளது.

  முன்பு ஒருமுறை இப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடி பற்றிக் கூறிய போது பிரதமர் மோடி என்பது ஒரு ’கருத்து’ ஒரு ‘தத்துவம்’ அவர் தனிநபர் அல்ல என்றார் மேலும் ஒரு படி மேலே போய் மகாத்மா காந்திக்குப் பிறகு இந்திய சமூகத்தையும் உளவியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர் மோடி என்றார் ராஜ்நாத் சிங், ஆனால் இவையெல்லாம் கூட மோடி மீதான அவரது சொந்தப் பிரமிப்பு என்றே பலரும் பார்த்தனர், அமித் ஷா-வின் பேச்சு இதையும் சிக்கலாக்குமாறு மோடியின் வெற்றி ஆதித்யநாத்தின் வெற்றியை நம்பியுள்ளது என்ற ரீதியிலான பேச்சு பாஜகவினரை பதற்றமடையச் செய்துள்ளது.

  அமித் ஷாவுக்கு கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியது பற்றி தெரியுமா என்று தெரியவில்லை, “பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தினாலும் அதனால் மோடிக்கு கெட்ட பெயர் ஏற்படவில்லை” என்றார், அதாவது மோடி என்ற பெயருக்கு இன்னும் நற்பெயர் உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்ற தொனியில் பேசிய பிரசாந்த் கிஷோர் மக்கள் மோடியை தூக்கி எறிந்தாலும், பாஜகவுடன் சில ஆண்டுகள் போராடித்தான் ஆகவேண்டும் என்றும் கூறினார் பிரசாந்த் கிஷோர்.

  பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக தோற்கும் என்று 2017-ல் எதிர்பார்க்கப்பட்டது , ஆனால் பாஜகதான் ஜெயித்தது. லோக்சபா தேர்தலில் பாஜக உ.பி.யில் 50% வாக்குகளைப் பெற்றது. 2017 சட்டமன்றத் தேர்தலை விட 10% அதிகம். 2014 லோக்சபா தேர்தலை விட 7% அதிகம். 2012-ல் 15% ஆக இருந்த உ.பி. பாஜக வாக்கு விகிதம் 2017-ல் 40% ஆக அதிகரித்ததற்குக் காரணம் நரேந்திர மோடிதானே என்று பாஜக ஆதரவாளர்கள் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: