சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. குறிப்பாக, சத்தீஸ்கரில் குறிப்பிட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் அபாயம் கொண்டவை. அப்படித்தான், மாவோயிஸ்ட் குழு ஒன்று, விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் ஒருவரை தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள கிராமம் படே டேவ்டா. இந்த கிராமத்தைச் சேர்ந்த 29 வயது ராணுவ வீரர் மோத்திராம் அன்சலா வடகிழக்கு மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று தனது உள்ளூர் சந்தையில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்த போது திடீரென புகுந்த மாவோயிஸ்ட் கும்பல் முழக்கமிட்டு ராணுவ வீரரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அவரது சகோதரர் மற்றும் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாலப் சின்ஹா, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று கூறி அவர், ராணுவ வீரரை கொலை செய்வது பயங்கரவாத செயலாகும் என்றார்.
இதையும் படிங்க: இரு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவரம்..!
பொதுவாக ராணுவ வீரர்களை குறிவைத்து மாவோயிட்டுகள் இதுவரை தாக்குதல் நடத்தியதில்லை. மாவோயிஸ்ட் தாக்குதலில் ராணுவ வீரர் கொல்லப்படுவது இதுவே முதல்முறை. உயிரிழந்த ராணுவ வீரர் சிஆர்பிஎஃப் வீரர் என்று தவறான எண்ணிக்கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 7 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army Man Killed, Army men, Chhattisgarh, Maoist