Home /News /national /

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ

கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம்

கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம்

சம்பவம் தொடர்பான சர்ச்சையை அடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அனிமேஷ் சக்சேனாவை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோவில் வீராங்கனைகளுக்கு உணவு மற்றும் காய்கறிகள் கழிவறை போன்ற பகுதியில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. வீராங்கனைகள் தங்கள் தட்டில் உணவை எடுத்து செல்லும் போது எதிரே பிரேமில் சிறுநீர் கழிக்கும் கிளாசெட்கள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது.


    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, மாநிலத்தை ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ளது. நமது கபடி வீராங்கனைகள் கழிவறையில் சாப்பிட வேண்டிய அவல நிலையை பாருங்கள். பொய்களை பரப்ப கோடிகளை செலவழிக்கும் பாஜகவுக்கு நமது வீராங்கனைகளுக்குச் செலவு செய்ய மனமில்லை என விமர்சித்துள்ளது.

    இதையும் படிங்க: கையில் வில் அம்புடன் சிலை எழுப்பி யோகி ஆதித்யநாத்திற்கு கோயில் கட்டிய நபர்!

    இந்த சம்பவம் தொடர்பான சர்ச்சையை அடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அனிமேஷ் சக்சேனாவை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று, வரும் நாள்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் ஆவண செய்யப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Kabaddi, Sports, Uttar pradesh, Viral Video

    அடுத்த செய்தி