Home /News /national /

புதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்து சென்ற அதிகாரிகள்

புதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்து சென்ற அதிகாரிகள்

ஓட்டல்களில் கெட்டுப் போயிருந்த சிக்கனில் உப்பு கொட்டி அழித்தனர்

ஓட்டல்களில் கெட்டுப் போயிருந்த சிக்கனில் உப்பு கொட்டி அழித்தனர்

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து புதுச்சேரியில் உணவகங்கள், சாலையோர கடைகள், ஸ்டார் ஹோட்டல்கள், மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த 10 தினங்களாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் ஹோட்டல், பேக்கரி மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் சோதனை செய்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஓட்டல்களில் கெட்டுப் போயிருந்த சிக்கனில் உப்பு கொட்டி அழித்தனர். தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து புதுச்சேரியில் உணவகங்கள், சாலையோர கடைகள், ஸ்டார் ஹோட்டல்கள், மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த 10 தினங்களாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் உணவு கலப்படத் தடுப்புப் பிரிவு போலீசாருடன் இணைந்து புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலையில், மூலகுளம், ரெட்டியார்பாளையம், ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சூப்பர் மார்க்கெட், பேக்கரி, சாலையோர கடைகள், ஓட்டல்கள் என அனைத்திலும் அதிரடியாக சோதனை செய்து அங்கு உள்ள பொருட்களின் தரம் குறித்தும், காலாவதியான தேதிகளை ஆய்வு செய்தும் சோதனை செய்தனர்.இதில் ஒரு ஓட்டலில் கெட்டுப் போய் இருந்த சிக்கன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றில் உப்பு கொட்டி அழித்தனர். மேலும்  சோதனைகள் நடத்தப்பட்ட கடைகளில் சுமார் 8 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். மேலும் கடைகளில் உரிமங்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன், புதுச்சேரியில் தொடர்ந்து உணவுகளை சோதனை செய்து வருகிறோம்.  சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்களில் ஆய்வு செய்த போது சில கெட்டுப்போன உணவுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்து உப்புக்கொட்டி அழித்துள்ளோம்.

Also read... சமையலறை வாஷ் பேசினை பொது கழிப்பறையில் பொருத்திய பேரூராட்சி நிர்வாகம்..!

மேலும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்  எட்டுக்கு மேற்பட்ட கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவிதார்.

எனவே பொது மக்களின் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Food security department official, Pondicherry

அடுத்த செய்தி