டெலிவரிபாய் டூ செயின் திருடன்.. மனைவியின் பேராசையால் தடம்மாறிய கணவன்

மாதிரிப்படம்

யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 • Share this:
  புதுமனைவி வருமானம் போதவில்லை என திட்டிக்கொண்டிருந்ததால் திருடனான இளைஞர் போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளார்.

  மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் சவுரப் யாதவ் வயது 20. தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார். சவுரப் யாதவின் வருமானத்தில் அவரது புதுமனைவியின் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை. அந்தப்பெண் தினமும் சவுரப் யாத்வுடன் சண்டைப்போட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்து புனே பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  Also Read: மாப்பிள்ளை கருப்பா இருக்காரு.. கல்யாணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கோடரியால் வெட்டி கொன்ற அண்ணன்

  இந்நிலையில் வகாட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சவுரப் யாதவின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். காவல்நிலையத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக சவுரப் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 121 கிராம் தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

  Also Read: திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விசாரணையின் போது, புனே பகுதியில் 7 இடங்களில்தான் கைவரிசை காட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.செயின் பறிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு யூடியூப்பில் வரும் செயின் பறிப்பு வீடியோக்களை பார்த்துள்ளார். அதன்மூலம் தானாக ஸ்கெட்ச் போட்டு புனே பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். மனைவியின் பேராசையால் தற்போது கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: