அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாளைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதன்படி நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை ஹைலைட்ஸ், பொருளாதார ஆய்வறிக்கை, புள்ளியியல் பின் இணைப்பு ஆகிய 3 அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24 நிதியாண்டில் 6.8% என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-24ம் ஆண்டில் பணவீக்கம் 6.8% ஆகவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிவேகத்தில் இந்தியா மீண்டுவிட்டதாகவும் உள்நாட்டு தேவை மற்றும் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில்தான் அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 26 லட்சத்து 60ஆயிரம் நபர்கள் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.