Home /News /national /

#Exclusive | CAA எதிர்ப்பு போராட்டங்களால் அந்நிய முதலீட்டுக்கு பாதிப்பா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

#Exclusive | CAA எதிர்ப்பு போராட்டங்களால் அந்நிய முதலீட்டுக்கு பாதிப்பா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

  • News18
  • Last Updated :
    தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு மக்கள் ஆசியுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நியூஸ் 18 குழும செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

    ”குடியுரிமை சட்டத்திருத்த போராட்டங்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிரான செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதால், அன்னிய முதலீடு பாதிக்கப்படாதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா, “அப்படி எதுவும் நடக்காது. கடந்த 3 மாதங்களாக உள்ள தரவுகளை பார்த்தால் போராட்டங்கள் முதலீடுகளை பாதிக்கவில்லை என்பது தெரியும். இன்னும் ஏராளமானோர் முதலீடு செய்ய காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளோம்.

    குடியுரிமை சட்டம் எவருக்கும் எதிரானதல்ல என மற்ற நாட்டவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அது குடியுரிமையை பறிப்பதற்கானது அல்ல, தருவதற்கானது. இதை தேர்தல் வாக்குறுதியாக தந்த மற்ற கட்சியினர் நிறைவேற்றவில்லை. நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு மக்கள் ஆசியுடன் இதை நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.

    ”டாடா குழுமத்தின் சந்திரசேகரன் உள்ளிட்ட தொழில் நிறுவன பெரும்புள்ளிகள் அரசின் கண்காணிப்பை வரவேற்கிறோம் சந்தேகம் நெருடலாக உள்ளது என்கின்றனரே?” என்ற கேள்விக்கு, “வரி விசாரணைக்காக அதிகாரிகளை நேரடியாக சந்திப்பதை தவிர்க்க இணையம் வழியாக எழுத்து மூலம் பதில் அளிக்கும் (Faceless) நடைமுறை அமலாகி உள்ளது.

    சந்தேகத்துக்கு உரியோருக்கு பிரத்யேக எண்களை ஒதுக்கி கேள்விகளை அனுப்புகிறோம். அந்த எண்ணை குறிப்பிட்டு, டிஜிட்டல் முறையில் பதில் அளித்தால் போதுமானது. இது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். துன்புறுத்தலை தடுக்கும்” என்று நிர்மலா தெரிவித்துள்ளார்.

    ”ஏராளமான இறக்குமதி வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தி உள்ளீர்கள், பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவா?” என்ற கேள்விக்கு, “அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் இந்திய சிறு நிறுவனங்கள் நலனுக்காகவே இந்த அறிவிப்பு.

    வெளிநாட்டில் இருந்து குவிக்கப்படும் விலை மலிவான, தரமற்ற வீட்டு உபயோக சாதனங்களை கட்டுப்படுத்தி தரமான இந்திய சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கவே சுங்க வரி உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் உதிரி பாகங்களை அல்ல முழுமை அடைந்த பொருட்களையே இங்கு குவிக்கின்றன. அவற்றிடமிருந்து உள்ளூர் சிறு, குறு நிறுவனங்களை காக்கவே இந்த நடவடிக்கை” என்று நிர்மலா சீதாரமன் கூறியுள்ளார்.
    Published by:Sankar
    First published:

    Tags: Budget 2020, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி