அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நபர் நிக்கோலாஸ். இவர் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று, காலை 9.30 மணி அளவில், டிடி வங்கி என்ற நிதி நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு பணம் வழங்கும் ஊழியரிடம் சென்று துண்டு சீட்டை தந்துள்ளார்.
அதில் “Assault” மற்றும் “Money” என்ற இரு வாசகங்கள் எழுதியிருந்தது. அதாவது, தாக்குதல் நடத்திவிடுவேன், பணம் வேண்டும் என்பதை குறிக்கும் விதத்தில் அந்த துண்டு சீட்டில் சிக்னல் கொடுத்துள்ளார். தனது பாக்கெட்டிற்குள் கைகளை வைத்துக்கொண்டு ஆயுதம் இருப்பது போல மிரட்டும் தொனியில் நின்றுள்ளார். பயந்து போய் அவரிடம் பணத்தை தந்துள்ளார் கேஷியர். அதேபோல், டிசம்பர் 7ஆம் தேதி அன்றும் சர்கிள் ஓகே என்ற வாகன எரிவாயு வைத்திருக்கும் பங்கில் நுழைந்து துண்டு சீட்டை தந்துள்ளார்.
அதில் 'பணத்தை எல்லாம் கொடுத்து விடுங்கள். மேலும் எனக்கு அங்குள்ள சிகரெட் பெட்டிகள் வேண்டும்' என்று மிரட்டி எழுதியுள்ளார். அங்கும் அதேபோல பாக்கெட்டிற்குள் கையை உள்ளவைத்து மிரட்டும் விதத்தில் நின்றுள்ளார். அவர்களும் பயந்து போய் பணத்தை தந்துள்ளனர்.
இந்த இரு சம்பங்களின் ஒற்றுமையையும் வைத்து பிளோரிடா காவல்துறை விசாரணை நடத்தி குற்றவாளி நிக்கோலசை பிடித்துள்ளது.பிடிப்பட்ட குற்றவாளி நிக்கோலஸை காவல்துறை விசாரித்ததில் அவர் கூறிய காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் கண்காணிப்பில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.பிக்கள் - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
தனக்கு போர் அடித்ததால் என்ன செய்வதென்று தெரியமால் திருட்டில் ஈடுபட்டேன் என்று பதில் கூறியுள்ளார். இதில் கூடுதல் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இரண்டு திருட்டின் போதும், அந்த நபர் போலீஸ் என்ற வார்த்தை எழுதியிருந்த தொப்பியை தலையில் அணிந்திருந்தார்.இதுவும், அந்த நபரை பிடிக்க காவல்துறைக்கு முக்கிய துப்பாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Robbery, USA, Viral News