கனமழை காரணமாக ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சாலையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி கர்நாடகாவைச் சேர்ந்த புதுமண பெண் பலி.
கர்நாடக மாநிலத்தை ராய்ச்சூரை சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி மேற்கு சர்ச் எதிரே உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் அவர்கள் பயணித்த கார் சென்று கொண்டிருந்தபோது ஏற்கனவே பெய்து கொண்டிருந்த பெரும் மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
அவர்கள் வெளி ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த இடத்தில் எந்த அளவிற்கு வெள்ள நீர் ஓடுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எப்படியாவது சென்றுவிடலாம் என்று காரை ஓட்டி சென்றனர். அப்போது சுமார் 5 அடி உயரத்திற்கு அந்த இடத்தில் மழை வெள்ளம் சென்று கொண்டிருந்ததால் கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதற்கு மேல் செல்லமுடியாமல் நடுவழியில் நின்றது. காரில் இருந்த 7 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களில் புதுமணப் பெண்ணான சந்தியா என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்ற ஆறு பேரும் காரில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்தில் சிக்கிய காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.