• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Youtube Video

உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Share this:
    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் இருதினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 26 பேர் உயிரிழந்தனர். 190-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான ரிஷிகங்கா மின் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறப்படுகிறது.

    தபோவான் தளத்தில் உள்ள ஆயிரத்து 900 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை மையமாகக் கொண்டு, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையதின் கழிவுகளை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் இருந்து, தற்போது வரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

    இதனிடையே, அந்த சுரங்கப்பாதையின் முகப்பு முழுவதும் 20 அடி உயரத்திற்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மண் மற்றும் சகதியால் அடைப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 180 மீட்டருக்கு பிறகு உட்புறமாக இரண்டாக பிரிகிறது. இதனால், அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்புள்ளதால், அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என நம்பப்படுகிறது.

    இரவு பகலாக சுரங்கப்பாதையில் நடைபெறும் மீட்பு பணிகள் காரணமாக, 130 மீட்டர் தூரம் வரை பாதை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 200 மீட்டர் இலக்கை எட்டிவிட்டால் அங்குள்ளவர்களை மீட்பதில் சிக்கல் இருக்காது என, மீட்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க...சசிகலாவின் உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

    அனல்மின் நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சிலரும் உள்ளே அகப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு சுரங்கப்பாதையின் முகப்பை அடைத்துள்ள, சகதியை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: