கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு.. வீடுகள் சேதம்.. கால்நடைகளை பறிகொடுத்த மக்கள்..

ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  தெலுங்கானா மாநிலத்தின் தென் மாவட்டங்கள், ஆந்திராவின் குண்டூர், கோதாவரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக அந்தப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் ஆகியவை நிரம்பியுள்ளன. அதனால் ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையை தொடர்ந்து கிருஷ்ணா நதியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான அளவில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துவிட்டன.

  தற்போதைய நிலையில் வினாடிக்கு 7 லட்சம் கன அடி என்ற விகிதத்தில் கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே நதிக்கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ள காரணத்தால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களையும் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்துச் சென்று முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

  கடுமையான மழை,வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து விட்டன. மழை வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் மீட்புப்பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க...ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: பட்டியல் இன இளம்பெண் உயிரிழப்பு.. நள்ளிரவிலேயே தகனம் செய்ய வற்புறுத்தியதாக கதறும் குடும்பத்தினர்..  இந்நிலையில், மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ள சேதங்களை விரைந்து மதிப்பிட்டு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
  Published by:Vaijayanthi S
  First published: