முகப்பு /செய்தி /இந்தியா / ப்ளிப்கார்டில் தள்ளுபடி விற்பனையில் தேங்காய் நார் விற்பனை! நெட்டிசன்கள் விமர்சனம்

ப்ளிப்கார்டில் தள்ளுபடி விற்பனையில் தேங்காய் நார் விற்பனை! நெட்டிசன்கள் விமர்சனம்

பிளிப்கார்ட்டில் தேங்காய் நார் விற்பனை

பிளிப்கார்ட்டில் தேங்காய் நார் விற்பனை

தேங்காய் நாரை ரூ.499 என விலை நிர்ணயம் செய்து அதை 62 சதவீதம் தள்ளுபடி விலையான ரூ.185க்கு தருகிறோம் என பிளப்கார்ட் தனது தளத்தில் விற்பனை செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ப்ளிப்கார்ட், அமேசான், ஜியோ மார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் சந்தை விலையை விட குறைந்த விலையில் பொருள்களை கொடுத்து மக்களை கவர்ந்துள்ளன.குறிப்பாக, பண்டிகை காலங்களை ஒட்டி ஆன்லைன் தளங்கள் அடுத்தடுத்து அதிரடி ஆபர்களை அறிவித்து வருகின்றன. தற்போது கூட பிரபலமான இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட், பண்டிகை கால சிறப்பு விற்பனையாக “பிக் பில்லியன் டே சேல்” என்ற பெயரில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை மூலம் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் முதல் எலக்ட்ரானிக் கேஜெட்கள் வரை குறைவான விலையில் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மக்க்ளை ஈர்த்து வருகின்றன. அதேவேளை, சாதாரணமாக கிடைக்கும் பொருள்களான கொட்டாங்குச்சி, வரட்டி போன்றவற்றையும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் விற்பனை செய்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அதற்கு அவை வைத்திருக்கும் விலை தான். எல்க்ட்ரானிக் சாதனங்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வெளியே சாதரணமாக 50, 100 ரூபாய்க்கு விற்கும் பொருள்களுக்கு 500, 1000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு.

இதையும் படிங்க: குண்டும், குழியுமான சாலையில் ஃபோட்டோசூட் நடத்திய மணப்பெண் - வைரல் ஆன வீடியோ.!

அப்படி தற்போது 480 கிராம் தேங்காய் நாரை ரூ.499 என விலை நிர்ணயம் செய்து அதை 62 சதவீதம் தள்ளுபடி விலையான ரூ.185க்கு தருகிறோம் என ப்ளிப்கார்ட் தனது தளத்தில் விற்று வருகிறது. மேலும் இந்த தேங்காய் நாரை இலவசமாக டெலிவரி செய்கிறோம் என்றுள்ளது.

தேங்காய் நாரை போய் இப்படி விலை வைத்து விற்பனை செய்யவதா என பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலையில், இந்தியாவில் அதிகம் கிராமம் உள்ளதால் இதெல்லாம் அவர்களுக்கு சாதரணமாக கிடைக்கலாம். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் உலக சந்தைக்கே விற்பனை செய்வதால் இது போன்ற பொருள்களையும் விலைவைத்து விற்பதில் தவறில்லை எனத் தெரிவிக்கிறார்கள்.

First published:

Tags: Flipkart, Online Sale, Online shopping