Home /News /national /

உள்நாட்டு விமான நிறுவனங்களின் விமான கட்டண வரம்பு நீக்கப்படுவது ஏன்? விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

உள்நாட்டு விமான நிறுவனங்களின் விமான கட்டண வரம்பு நீக்கப்படுவது ஏன்? விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

கடந்த பிப்ரவரி 24 முதல் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ATF விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
உள்நாட்டு விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளில் உள்ள விமான கட்டண வரம்புகள் வரும் 31-ம் தேதி முதல் நீக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதால் விமான போக்குவரத்து கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, 2020-ம் ஆண்டில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விமானக் கட்டண வரம்புகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால், விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க கட்டண வரம்புகளை நீக்கி, தற்போது நடைமுறையில் இருக்கும் 72.5 சதவீத பயணிகள் எண்ணிக்கையை 85 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உள்நாட்டு விமான நிறுவனங்களின் விமான கட்டண வரம்பு நீக்கப்பட்டது ஏன்?

இதுகுறித்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், தினசரி தேவை மற்றும் ஏர் டர்பைன் எரிபொருளின் (ATF) விலையை கவனமாக ஆய்வு செய்த பிறகே விமான கட்டண வரம்புகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும்காலங்களில் உள்நாட்டு போக்குவரத்து வளர்ச்சிக்கு இத்துறை தயாராக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 24 முதல் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ATF விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக விலையில் சிறிது தளர்வு காணப்படுகிறது. மேலும், விமானப் பயணத்திற்கான பயணிகளின் தேவை, திட்டமிடப்பட்ட உள்நாட்டுச் செயல்பாடுகளின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்த பிறகு, ஆகஸ்ட் 31 முதல் விமானக் கட்டணங்கள் தொடர்பாக அவ்வப்போது அறிவிக்கப்படும் கட்டண வரம்பை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Archana R
First published:

Tags: Domestic, Flight, India

அடுத்த செய்தி