இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவிற்கு விமான சேவை

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவிற்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவிற்கு விமான சேவை
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • Share this:
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியா- அமெரிக்கா இடையே அமெரிக்கன் கெரியர் யுனிடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் 31-ம் தேதி வரை 18 விமானங்களை இயக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில், டெல்லி - நியூயார்க் இடையே தினமும் ஒரு விமானம் வீதமும், டெல்லி - சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களும் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று ஏர் பிரான்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு நாளை முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை 28 விமானங்களை இயக்க உள்ளன.

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க...

திருப்போரூரில் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் ... பகீர் பின்னணி என்ன?

இருநாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை மீறி நியாயமற்ற வகையில் செயல்படுவதாக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா- இந்தியா இடையே புதிய ஒப்பந்தப்படி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading