Home /News /national /

காதலியின் சாட்டிங் காரணமாக 6 மணி நேரம் தாமதமான விமானம்!

காதலியின் சாட்டிங் காரணமாக 6 மணி நேரம் தாமதமான விமானம்!

மாதிரி படம்

மாதிரி படம்

இதைப் பார்த்த சக பெண் பயணி ஒருவர், உடனடியாக விமானப் பணியாளர்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். வானில் பறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த விமானத்தின் பயணம் இதனால் நிறுத்தப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தண்டவாளத்தில் ஓடும் ரயில் என பல போக்குவரத்து வசதிகள் இருப்பினும், ஆகாயத்தில் பறக்கும் விமானப் போக்குவரத்திற்கு இருப்பதைப் போல அதி உயர்ந்த பாதுகாப்பு கெடுபிடிகள் வேறு எதற்குமே கிடையாது. சின்னஞ்சிறு தொழில்நுட்பக் கோளாறு என்றாலும், நடுவானில் அது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், தொழில்நுட்ப ரீதியாகவும் விமானங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    அதே சமயம், நடுவானில் பயணிகளை துன்புறுத்தும் விதமாக அல்லது விமானக் கடத்தும் விதமாக யாரேனும் எந்த செயல்களையும் முன்னெடுக்கக் கூடாது என்பதற்காக பயணிகள் என்னென்ன பொருட்களை கொண்டு செல்ல இயலும் என்பது குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படும். சந்தேகத்துக்கு உரிய வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால், உடனடியாக அதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து, தீர்வு எட்டப்படும். ஆனால், அரிதிலும், அரிதாக சக பயணி ஒருவரின் மொபைலுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜ் என்பது ஒரு விமானம் தாமதம் அடைவதற்கான காரணமாக இருந்துள்ளது.

    மங்களூரு நகரில் இருந்து மும்பை மாநகருக்கு கடந்த சனிக்கிழமை மாலையில் இண்டிகோ நிறுவனம் புறப்படுவதாக இருந்தது. அப்போது, சக பயணி ஒருவரின் மொபைல் ஃபோனுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜை பெண் ஒருவர் ஏதேச்சையாக படித்து விட்டார்.

    அந்த நபர், மங்களூரில் இருந்து மும்பை புறப்படும் விமானத்தில் இருந்த நிலையில், அவரது காதலி பெங்களூரு செல்வதற்காக அதே விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண் அவருக்கு அனுப்பிய மெசேஜ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்திருக்கிறது.

    இதைப் பார்த்த சக பெண் பயணி ஒருவர், உடனடியாக விமானப் பணியாளர்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். வானில் பறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த விமானத்தின் பயணம் இதனால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த 185 பயணிகளின் உடமைகள் அனைத்தும் மீண்டும் ஒருமுறை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் சுமார் 6 மணி நேரம் தாமதமான நிலையில் மாலை 5 மணிக்கு தான் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

    இதற்கிடையே, பதற்றத்திற்கு காரணமான நபரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், அவர் விமானம் ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அவரது காதலியும் விமானத்தை தவறவிட்டார்.

    விமானத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் அந்த டெக்ஸ்ட் மெசேஜ் இருந்தது என்றாலும் கூட, விசாரணையில் காதலர்கள் விளையாட்டுக்காக இதனை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது என்பதால் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Girl Friend, Indigo Air Service

    அடுத்த செய்தி