• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விமான கட்டணங்களை திருப்பி வழங்காத விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

விமான கட்டணங்களை திருப்பி வழங்காத விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட விமான கட்டணங்களை திருப்பி வழங்காதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் வெளியூர், வெளிநாடு செல்ல விமான டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை கட்டணத்தை திருப்பி வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு வந்த போது நிதி நெருக்கடி காரணமாக கட்டணங்களை திரும்ப வழங்க முடியவில்லை என்று விமான நிறுவனங்கள் வாதிட்டன.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அந்த கட்டணத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் டிக்கெட் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

    இரண்டு ஆண்டுகள் வரை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 3 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Also read... Coca Cola குளிர்பானத்திற்கு தடை கேட்டவருக்கு ₹ 5 லட்சம் அபராதம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: