இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர் சக்தியை மேம்படுத்த நெகிழ்வான பணியிடங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் ஆகியவை தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “அமிர்த கால் எனும் வளர்ந்த தேசத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் கனவுகளை நனவாக்குவதில் இந்தியாவின் தொழிலாளர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது. அமைப்பு மற்றும் அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக நாடு தொடர்ந்து உழைத்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.
பிரதான் மந்திரி ஷ்ரம்-யோகி மான் தன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் திட்டங்கள் தொழிலாளர்களுக்கு அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புக்கான அங்கீகாரத்தை உறுதி செய்துள்ளன என்றார்.
" ஒரு ஆய்வின்படி, தொற்றுநோய்களின் போது அவசர கடன் உத்தரவாதத் திட்டம் ,1.5 கோடி வேலைகளைக் காப்பாற்றியது. நாடு தனது தொழிலாளர்களுக்கு அவர்களின் தேவைப்படும் நேரத்தில் ஆதரவளித்ததைப் போலவே, தொற்றுநோயில் இருந்து மீளும் நாட்டிற்காக தொழிலாளர்கள் தங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்" என்று குறிப்பிட்டார்.
தொழிலாளர் சக்தியை சமூகப் பாதுகாப்பின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்று இ-ஷ்ரம் போர்டல். அதில் ஒரு வருடத்தில் 400 பகுதிகளைச் சேர்ந்த சுமார் 28 கோடி தொழிலாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பயனடையும் இ-ஷ்ரம் போர்ட்டலுடன் மாநில போர்டல்களை ஒருங்கிணைக்குமாறு அனைத்து அமைச்சர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
29 தொழிலாளர் சட்டங்கள் 4 எளிய தொழிலாளர் குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. இது குறைந்தபட்ச ஊதியம், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சமூக வாழ்க்கையை உறுதி செய்யும் என்று கூறினார்.
மேலும், நான்காவது தொழிற்புரட்சியை முழுமையாகப் பயன்படுத்தி, இயங்குதளம் மற்றும் கிக் பொருளாதாரம் மற்றும் ஆன்லைன் வசதிகளில் வளர்ந்து வரும் பரிமாணங்களை நோக்கி பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
9,000 இடங்களில் 3700 கிலோ வெடி மருந்துகள்.. நொய்டா இரட்டை கோபுர ஏன் எதற்காக இடிக்கப்படுகிறது?
நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் 2047 ஆம் ஆண்டிற்கான அமிர்த கால் தொலைநோக்கு திட்டத்தை தயாரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு நெகிழ்வான பணியிடங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்கள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர் பெண்களின் பங்கேற்பிற்கான வாய்ப்புகளாக நெகிழ்வான பணியிட அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என்றார்.
"பெண்கள் சக்தியை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியா தனது இலக்குகளை விரைவாக அடைய முடியும்." நாட்டில் புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் பெண்கலின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உயர்தர திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகின் பல நாடுகளுடன் இந்தியா இடம்பெயர்வு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாட்டின் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Labour Law, Modi speech, Work From Home