முகப்பு /செய்தி /இந்தியா / திருமலை திருப்பதியில் 5 வயது சிறுவன் கடத்தல்.. மர்ம பெண்ணை தேடும் போலீஸ்

திருமலை திருப்பதியில் 5 வயது சிறுவன் கடத்தல்.. மர்ம பெண்ணை தேடும் போலீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருமலையில் திருநாமம் போடும் வேலை செய்யும் நபரின் 5 வயது மகனை மர்ம பெண் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாமிநேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணா. இவர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் போடும் வேலையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் வெங்கட்ரமணா அவரது மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகன் கோவர்தன் ஆகியோர் திருமலையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், பெண் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். பெற்றோர் கவனிக்காத நேரம் பார்த்து அங்கிருந்து சிறுவன் கோவர்த்தனை கடத்தி சென்றுவிட்டார்.

உடனடியாக பதறிப்போன பெற்றோர் நீண்ட நேரம் தேடியும் மகன் கிடைக்காததை அடுத்து, தந்தை வெங்கட்ரமணா திருமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திருப்பதி மலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம பெண் ஒருவர் சிறுவன் கோவர்த்தனை கடத்தி பேருந்து மூலம் திருப்பதிக்கு அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த திருமலை காவல்துறை சிறுவனை கடத்திய பெண் மற்றும் சிறுவன் கோவர்தன் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

சிறுவனை கடத்திய பெண் பற்றிய தகவல் கிடைத்தால் திருமலை காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு 9440796769, 9440796772 ஆகி எண்களில் தகவல் அளிக்க பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Kidnap, Tirumala Tirupati