காணாமல்போன அருணாச்சல பிரதேச இளைஞர்களை ஒப்படைத்தது சீனா..

காணாமல்போன அருணாச்சல பிரதேச இளைஞர்களை ஒப்படைத்தது சீனா..

கோப்புப்படம்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து காணாமல் போன 5 இளைஞர்களை, சீன ராணுவம் இன்று ஒப்படைத்துள்ளது.

 • Share this:
  அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்திலிருந்து 5 இளைஞர்கள் கடந்த வாரம் காணாமல் போனார்கள். அவர்களை சீன ராணுவம் கடத்தியதாக கிழக்கு அருணாச்சல பிரதேச எம்.பி. தபீன்கான் குற்றம்சாட்டிய நிலையில், 5 பேரும் எல்லைத் தாண்டி வந்ததாக சீன ராணுவம் கூறியிருந்தது.  அந்த 5 இளைஞர்களையும் சீன ராணுவம் இன்று ஒப்படைக்க இருப்பதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

  அவர்கள் வேட்டைக்காரர்கள் என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் அனைவரும் போர்ட்டர்கள் என அவர்களின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் கூறி வந்தனர். கடந்த 2-ஆம் தேதியன்று இவர்கள் கவனக்குறைவால் எல்லையைத் தாண்டிவிட்டதாகவும் 8-ஆம் தேதி சீன ராணுவம் இவர்கள் குறித்த விவரங்களைத் தந்ததாகவும் ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்நிலையில், இன்று காணாமல் போன அவர்கள் அனைவரையும் சீன ராணுவம் ஒப்படைத்துள்ளது.
  Published by:Rizwan
  First published: