பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பிரதமர் மோடி, 1987ஆம் ஆண்டில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவராக உருவெடுத்து 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் பாஜகவின் வடிவத்தையே பிரதமர் மோடி மற்றி அமைத்துள்ளார்.
பிரதமர் மோடி கட்சியில் இணைந்த காலத்தில் பாஜக வெறும் இரண்டு எம்பிகளை மட்டுமே வைத்திருந்தது. குஜராத்திலும் ஆட்சி கட்டிலில் கூட அமரவில்லை. பாஜக ரத யாத்திரையை அறிவித்த காலம் அது. பிரதமர் மோடி பாஜகவில் ஏற்ற முதல் பொறுப்பு அகமதாபாத் உள்ளாட்சி தேர்தலாகும். தனது முதல் பொறுப்பை வெற்றிகரமாக செய்து காட்டினார். பின்னர் அத்வானியின் ரத யாத்திரையை சிறப்பாக ஒருங்கிணைத்த மோடி, குஜராத்தில் கட்சி வளர்ச்சிக்கான ஆதார சக்தியாக விளங்கினார்.
2013ஆம் ஆண்டில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் வரை பாஜக பிராமணர்கள்-பனியாக்கள் ஆதிக்கம் கொண்ட உயர் வகுப்பினரின் கட்சியாகவே பார்க்கப்பட்டது. 2014 இல் இருந்து 2022க்குள் உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜகவை மாற்றியதுடன் கட்சியில் 5 அடிப்படை மாற்றங்களை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்தி மாநிலங்களின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றம்
மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 225 தொகுதிகள் இந்தி மொழி பேசும் மாநிலங்களாகும். மோடியின் வருகைக்கு முன்னர் நகர்ப்புறங்கள் உயர் வகுப்பினராக பார்க்கப்பட்ட பாஜகவை அதிக கிராம்புறங்களை கொண்ட இந்தி மாநிலங்களின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி காட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள கிரமாப்புற தொகுதிகளான 127 தொகுதிகளில் பாஜக 16.5% வாக்குவங்கி தான் வைத்திருந்தது. அதில் தற்போது பாஜக வாக்குவங்கி 40% ஆக உயர்ந்துள்ளது. இதே கிராமப்புங்களில் 2014ஆம் ஆண்டு 57.4 சதவீத தொகுதிகளை மட்டுமே பாஜக வென்ற நிலையில், அது 2019ஆம் ஆண்டு 74.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.கிராம நகரங்கள் இரண்டும் கலந்த 79 தொகுதிகளில் 2009ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2019இல் பாஜக அசுர வளர்ச்சியை கண்டுள்ளது.
அனைத்து சமூக தளங்களிலும் தடம் பதித்த பாஜக
ஆண்டாண்டு காலமாக பாஜக உயர் வகுப்பினருக்கான கட்சியாக இருந்த நிலையில், அந்த நிலையை மாற்றி காட்டியவர் பிரதமர் மோடி. 2020 ஆண்டு இது சுட்டிக்காட்டும் விதமாக பிரதமர் மோடியே பாஜகவில் 113 ஓபிசி, 43 எஸ்டி, 53 எஸ்சி எம்பிக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதாவது கட்சியின் 68.9 சதவீத எம்பிக்கள் உயர் வகுப்புகளை சாராதவர்களே. இது பாஜகவில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மாற்றம். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக களமிறக்கிய வேட்பாளர்களில் 57.5 சதவீதம் பேர் ஓபிசி மற்றும் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பாஜகவில் வேட்பாளர்கள் மட்டுமல்லாது கட்சி பொறுப்புகளிலும் ஓபிசி மற்றும் உயர் வகுப்பு அல்லாத பிரிவுகளுக்கு அதிக பிரதிநித்துவம் தரப்பட்டுள்ளது. 2013இல் இருந்து 2019க்குள் பாஜகவில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம் இது.
ஏழைகளுக்கு நேரடி உதவி திட்டங்கள்
சமூக தளத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான நல திட்டங்களை நேரடியாக பிசகு இல்லாமல் கொண்டு சேர்ப்பதில் தனி கவனம் செலுத்தி அதை சாதித்து காட்டியவர் மோடி. இதனால் ஏழைகளின் நம்பிக்கை பெற்ற கட்சியாக பாஜகவை அவர் மாற்றிகாட்டியுள்ளார்.
ஆதார், மொபைல் எண், ஜன்தன் வங்கி கணக்கு ஆகியவற்றின் இணைப்பை சாத்தியப்படுத்தி மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக சென்று சேர்ப்பதை அவர் சாத்தியப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் நேரடி உதவி திட்டங்கள் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. இதை 2018-19இல் 15 மடங்கு அதிகரித்து காட்டி 434 திட்டங்களாக உயர்த்தியுள்ளார். அதேபோல் இந்த காலக்கட்டத்தில் பயணாளர்களின் எண்ணிக்கையும் 10.8 கோடியில் இருந்து 76.3 கோடியாக 7 மடங்கு உயர்ந்துள்ளது. உதவித்தொகையும் 7,367 கோடியில் இருந்து ரூ.2.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.இலவச கேஸ், கிராம்புற வீடுகள், கழிப்பறைகள் ஆகிய திட்டங்கள் இந்த நேரடி உதவித்திடங்களின் முன்னணி திட்டங்களாக விளங்குபவை.
கட்சிக்கு புதிய பெண் வாக்காளர்கள் வருகை
வரலாற்று ரீதியாகவே வாக்களிப்பதில் பாலிய ரீதியாக பாகுபாடுகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் ஆண் வாக்களிப்பதை விட குறைவாகவே பெண்கள் வாக்களித்து வந்தனர். அதேபோல், பெண்கள் அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் முதல் முறையாக ஆண்களை(67%) விட சற்று அதிகமாக பெண்கள்(67.17) வாக்களித்த சாதனை நிகழ்ந்தது.முக்கியமான பல மாநிலங்களில் காங்கிரஸை விட பாஜகவுக்கு பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகைக்குப் பின் கிராமப்புற பெண்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அதிக பெண் வேட்பாளர்களை களமிறக்கிய கட்சி பாஜக தான். அதேபோல், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தை விட பெண் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் மோடி ஆட்சிகள் அதிகமாக உள்ளது.அதேபோல், மோடி,ஷா தலைமையிலான பாஜகவில் கட்சி பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகளவில் கட்சியின் மத்திய நிர்வாக பொறுப்புகளில் 16.9 சதவீதம் பெண்களை பாஜக நியமித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி
பாஜகவில் ஐந்தாவது முக்கிய மாற்றத்தை பிரதமர் மோடி வட கிழக்கு மாநிலங்கள் மூலம் கொண்டுவந்துள்ளார். மோடி வருகைக்கு முன்பு வரை தடமே இல்லாத பகுதிகளான வட கிழக்கு மாநிலங்களில் சாதித்து காட்டியவர் மோடி.2016ஆம் ஆண்டு வரை எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒரு முறை கூட பாஜக ஆட்சி அமைத்ததில்லை. அதேபோல் இதை காலகட்டம் வரை பாஜக எந்த மாநிலத்திலும் இரண்டாது பெரிய கட்சியாகவும் இருந்ததில்லை. ஆனால், 2021இல் எட்டில் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரித்தில் ஏறி அமர்ந்துள்ளது. அசாம், திரிபுரா, அருணாசல பிரதேசம், மணிபூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முதலமைச்சர்களும் மற்ற மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயாவில் கூட்டணி கட்சி முதலைச்சர்களும் உள்ளனர். காங்கிரஸ் வசத்தில் இருந்து கணிசமான வட கிழக்கு மாநிலங்கள் பாஜவிடம் தற்போது சென்றுள்ளன. 2014ஆம் ஆண்டு வட கிழக்கு மாநிலங்களில் 32 சதவீத தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 2019இல் இதை 56 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பொறுப்பு துறப்பு - இது நெட்வொர்க் 18இன் கன்சல்டிங் ஆசிரியரான நலின் மேத்தா எழுதிய சிறப்பு கட்டுரையின் மொழி பெயர்ப்பு. இவர் டேராடூனின் UPES பல்கலைக்கழகத்தின் டீனாக உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, LK Advani, Modi Birthday, PM Modi