ஹோம் /நியூஸ் /இந்தியா /

கல்லூரி மாணவிக்கு கட்டாய முத்தம்.. சீனியர்களின் ராகிங் அட்டகாசம்.. போக்சோவில் 5பேர் கைது

கல்லூரி மாணவிக்கு கட்டாய முத்தம்.. சீனியர்களின் ராகிங் அட்டகாசம்.. போக்சோவில் 5பேர் கைது

மாணவிக்கு பாலியல் சீண்டல்

மாணவிக்கு பாலியல் சீண்டல்

கைதான முக்கிய குற்றவாளி அபிஷேக் நஹாக் ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் சிறை சென்று பிணையில் வெளிவந்தவர் ஆவார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Odisha (Orissa), India

  ஒடிசாவில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கக் கூறி ராக்கிங் செய்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பினாயக் ஆச்சார்யா என்ற அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் பலர் ஜூனியர் மாணவியை கடந்த செவ்வாய் கிழமை அன்று மோசமான முறையில் ராக்கிங் செய்துள்ளனர்.

  அபிஷேக் நஹாக் என்ற 24 வயது சீனியர் மாணவர் தலைமையில் சுமார் 12 மாணவர்கள் மாணவியை சுற்றி வளைத்து ஐ லவ் யூ எனக் கூறி தொல்லை செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் மாணவியை கட்டாயப்படுத்தி முத்தம் வழங்கியுள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 12 மாணவர்களை கல்லூரியை வெளியேற்றி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  மேலும், முக்கிய குற்றவாளிகள் 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறார்கள். இது சாதாரணமான ராக்கிங் சம்பவம் அல்ல, பாலியல் சீண்டல் குற்றம் எனக் கூறியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்பான் விவேக் குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

  இதையும் படிங்க: சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல் - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

  இதில் கைதான முக்கிய குற்றவாளி அபிஷேக் நஹாக் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் ஆவார். அம்மாநிலத்தை ஆளும் பீஜு ஜனதாதளம் கட்சியின் மாணவர் பிரிவு பொறுப்பாளர் ஆக உள்ளார். இவர் ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் சிறை சென்று பிணையில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Odisha, Viral Video