ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்

ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்

ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்

ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்

இந்திய பரிந்துரைத்துள்ள அனைத்து ஈரநிலங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியாவில் ஈரநிலங்களின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு 75 ஆக மாறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai

இந்தியாவின் ஐந்து ஈரநிலங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தள அந்தஸ்தை பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் உள்ள ராம்சார் நகரில் 1971 ஆம் ஆண்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான மாநாடு கையெழுத்தானது. உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் தன்மையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் இது.

சதுப்பு நிலங்களுக்குள் எந்தவிதமான ஆக்கிரமிப்பு, தொழில் நிறுவுதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், திடக்கழிவுகளை கொட்டுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல், வேட்டையாடுதல் மற்றும் நிரந்தரமான கட்டுமானம் ஆகியவை தடை செய்துள்ளது.

இந்தியா, நாடு முழுவதும் உள்ள இரண்டு டஜன் தளங்களை ராம்சார் பட்டியலில் சேர்க்குமாறு பரிந்துரைத்துள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து ராம்சர் தளங்களும் அந்த பட்டியலில் அடங்கும். அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியாவில் ஈரநிலங்களின் மொத்த எண்ணிக்கை  75 ஆக மாறும். உலகளவில்,  தற்போது சுமார் 2,500 தளங்கள் உள்ளன.

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கான சர்வதேச தினம்

இந்த மாதம் இந்தியாவில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட  5 இடங்கள்:

1)கரிகிலி பறவைகள் சரணாலயம், காஞ்சிபுரம், தமிழ்நாடு

2)பள்ளிக்கரணை சதுப்புநில வனம், தமிழ்நாடு

3) பிச்சாவரம் சதுப்புநிலம், தமிழ்நாடு

4) பாலா ஈரநிலம், மிசோரம்

5) சாக்ய சாகர்,மத்திய பிரதேசம்.

இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் ஈரநிலங்களை வரைபடமாக்கியுள்ளது. இது 15.98 மில்லியன் ஹெக்டேர்களை உள்ளடக்கியது. இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.86% ஆகும். 2017-18ல் மொத்தம் 2,31,195 ஈரநிலங்கள் 1:50,000 என்ற அளவில் வரைபடமாக்கப்பட்டுள்ளன.

சிலிகா ஏரி பகுதிகள் (ஒடிசா), வுலர் ஏரி (ஜே&கே), ரேணுகா (இமாச்சல பிரதேசம்), சம்பார் ஏரி (ராஜஸ்தான்), தீபூர் பீல் (அசாம்), கிழக்கு கொல்கத்தா ஈரநிலங்கள் (மேற்கு வங்காளம்), நல் சரோவர் (குஜராத்), ஹரிகா (பஞ்சாப்), ருத்ர சாகர் (திரிபுரா) மற்றும் போஜ் சதுப்பு நிலம் (மத்திய பிரதேசம்) ஆகியவை ராம்சார் தளங்களின் பட்டியலில் உள்ள நாட்டின் முக்கிய ஈரநிலங்களில் ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளுக்கு இடையே செலவு பகிர்வு அடிப்படையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்களை (ஏரிகள் உட்பட) பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான தேசிய நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான தேசிய திட்டம் (NPCA) என்ற மத்திய நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

First published:

Tags: Environment, Pallikkaranai, Pichavaram