ஹோம் /நியூஸ் /இந்தியா /

17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்!

17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்!

ஹைதரபாத்தில் 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

ஹைதரபாத்தில் 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

குற்றத்தில் ஈடுபட்ட சிறார்கள் மாணவியை பிளாக் மெயில் செய்ததுடன் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது சிறுமியை 9,10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஹயத்நகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு வசிக்கும் இந்த 17 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அப்பகுதியில் வசிக்கும் 9,10 வகுப்பு படிக்கும் சிறார்கள் 5 பேர் மாணவியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.அவர் தனியாக இருப்பதை உணர்ந்து 5 பேரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அத்தோடு நிற்காமல் தங்கள் செயலை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் வீடியோவை பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். 10 நாள்கள் கழித்து மீண்டும் அந்த மாணவியின் வீட்டிற்கு வந்து இருவர் வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்து மீண்டும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் அந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு பரப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: இன்னும் 8 வருஷம்தான்.. பாதிக்கப்படவுள்ள 20 கோடி இந்தியர்கள்.. மிரட்டும் வெப்ப அலை குறித்து ஷாக் ஆய்வு!

இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஹயத்நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் காவல்துறை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு 5 சிறுவர்களையும் கைது செய்துள்ளது. அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து,பின்னர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தது. மேலும், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

First published:

Tags: Gang rape, Hyderabad, Minor girl, POCSO case, Rape case