தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க ஐந்து பேர் கொண்ட குழு! இரு மாநில முதல்வர்கள் அறிவிப்பு

இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்கள்.

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க ஐந்து பேர் கொண்ட குழு! இரு மாநில முதல்வர்கள் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:16 PM IST
  • Share this:
இரு மாநில தண்ணீர் பிரச்னை தீர்ப்பதற்கு இரண்டு மாநிலங்களிலும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என்று இரு மாநில முதல்வர்களும் தெரிவித்துள்ளனர். 

தமிழகம் மற்றும் கேரளாவுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் திருவனந்தபுரத்தில் இன்று மாலை சந்தித்து பேசினர். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செ

இரு மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  அப்போது பேசிய பிரனராய் விஜயன், ‘இரு மாநில நதிநீர் பிரச்சனை சம்மந்தமாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும். ஒரு வாரத்துக்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு நாள் அறிவிக்கப்படும். முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு ஏற்படுத்தும். நீர் மின் உற்பத்தி மற்றும் பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்படும். இதுபோன்ற இரு மாநிலப் பிரச்சினைகள் அடுத்தடுத்த


பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணபடும்.

பரம்பிகுளம், ஆழியாறு திட்ட ஒப்பந்தம் புதிப்பிக்கபடும். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். ஒரு வாரத்திற்குள் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நாள் அறிவிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்கள். தமிழக முதல்வர் அமைச்சர் மற்றும் குழுவிற்கு நன்றி’ என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’60 ஆண்டுகளான பரம்பிகுளம்- ஆழியாறு நீர் பங்கீடு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஆலோசித்தோம். தமிழ்நாடு மாநில மக்கள் விவசாயிகள், கேரள மாநில மக்கள், விவசாயிகள் இரு தரப்பினரும் சகோதரர்களாக இருக்கின்றனர். நெய்யாறு கால்வாய் போன்ற சிறிய சிறிய பிரச்சினை களுக் கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.

Loading...

இரண்டு மாநிலத்திலும். ஐந்து பேர் கொண்ட குழு மூலமாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்தி இரு மாநில பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...