கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்து - 5 பேர் பலி

news18
Updated: February 13, 2018, 2:25 PM IST
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்து - 5 பேர் பலி
கொச்சின் கப்பல் கட்டும் தளம்
news18
Updated: February 13, 2018, 2:25 PM IST
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால்  5 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் கப்பலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியையும் தீயணைப்பு வீரர்கள் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் கப்பலில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்