ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது

கேரளாவில் சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது

தோட்டத்தில் பொறி வைத்து 50 கிலோ எடை கொண்ட 6 வயது சிறுத்தையை பிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி கொன்று, சமைத்த உண்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவரது தலைமையிலான 5 பேர் முனிபாரா வனப்பகுதியில், உள்ள தோட்டத்தில் பொறி வைத்து 50 கிலோ எடை கொண்ட 6 வயது சிறுத்தையை பிடித்துள்ளனர். அங்கிருந்து, அதனை அடித்துக் கொன்ற அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து உண்டுள்ளனர்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், வினோதின் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் 5 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து, சிறுத்தையின் 10 கிலோ இறைச்சி, அதன் பல் மற்றும் தோல் ஆகியவை மீட்கப்பட்டது. பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் உள்ள சிறுத்தையை கொன்ற 5 பேருக்கும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

First published:

Tags: Kerala, Leopard