வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பு வழங்கும் ஐந்து நீதிபதிகள் யார்?

வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பு வழங்கும் ஐந்து நீதிபதிகள் யார்?
ஐந்து நீதிபதிகள்
  • News18
  • Last Updated: November 9, 2019, 10:36 AM IST
  • Share this:
அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்கும் ஐந்து நீதிபதிகள் நீதித்துறை பயணம் குறித்த கட்டுரை

 

நீதிபதி ரஞ்சன்கோகாய்: 1978-ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்த அவர், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2001-ம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், 2011-ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர் பெற்றார். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.


நீதிபதி எஸ்.ஏ.போப்டே : மூத்த நீதிபதியான போப்டே, ரஞ்சன் கோகாய் பணி முடிவுக்குப் பிறகு, நவம்பர் 18-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 1998-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், மார்ச் 29-ம் தேதி 2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதிவி உயர்வு பெற்றார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதிவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவிவகிப்பார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்: பல அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். அடிப்படை உரிமைகள் தொடர்பான அவருடைய பரந்துபட்ட பார்வையின் காரணமாக பரவலாக அறியப்பட்டவர். மகாராஷ்டிரா நீதித்துறை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர். 1998-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு 1998-ம் ஆண்டு வரை இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியார். அக்டோபர் 31-ம் தேதி 2013-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு மே 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி அசோக் பூஷன்: 1979-ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். பின்னர், ஏப்ரல் 6-ம் தேதி 1979-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குடிமையியல் பிரிவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அவர், கனிமவளத்துறை, மாநகராட்சி அமைப்பு, வங்கிகள், கல்வி நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார். பின்னர், அலகாபாத் பார்கவுன்சிலின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2014-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கேரளா மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், மார்ச் 3-ம் தேதி 2015-ம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி அப்துல் நசீர்: ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில், இவர் மட்டுமே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2003-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி கர்நாடகா நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2004-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்