ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு...

சாலை விபத்து - ஆந்திரா

நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஆந்திராவில் மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஐந்து கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள கோரகண்டுகுரு கிராமத்தில் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்வதற்காக கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த மீன் குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட 5 கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உயிரிழந்தவர்கள் சடலத்தை நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

  மேலும் படிக்க... Puducherry | புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரம் - தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: