முகப்பு /செய்தி /இந்தியா / மதுபோதையில் காவல் நிலையத்திற்குள் குத்தாட்டம் போட்ட போலீசார்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

மதுபோதையில் காவல் நிலையத்திற்குள் குத்தாட்டம் போட்ட போலீசார்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஜார்கண்ட் போலீசார் வைரல் வீடியோ

ஜார்கண்ட் போலீசார் வைரல் வீடியோ

ஜார்கண்ட் மாநிலத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே காவலர்கள் மது அருந்திக் கொண்டு நடனடமாடி கலர் பொடி தூவி ஹோலி கொண்டாடிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jharkhand, India

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் மார்ச் 8 கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்த பண்டிகை படு உற்சாாகமாக கொண்டாடப்படுகிறது. ஒருவர் பிறர் மீது வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆட்டம், பாட்டம் என மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே காவலர்கள் மது அருந்திக் கொண்டு நடனடமாடி கலர் பொடி தூவி ஹோலி கொண்டாடிய அதிர்ச்சியை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்காண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள மகாகாமா பகுதி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஹோலி அன்று காவல் நிலையத்திற்குள் பணியில் இருக்கும் போதே சீருடை இன்றி வண்ணப்பொடிகளை பூசி விளையாடியுள்ளனர்.

அத்துடன் காவல்நிலையத்திற்குளேயே மது அருந்து விட்டு நடனமாடியுள்ளனர். இவர்கள் மது போதையில் ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான பாபுலால் மராண்டி, பாதுகாப்பை வழங்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற காவல் நிலையத்திற்குள் நடந்து கொள்ளும் அலங்கோலம் இங்கு நடைபெறுகிறது. ஹேமந்த் சோரனின் மோசமான ஆட்சியால் ஜார்கண்ட் மக்கள் மோசமான சூழலுக்கு ஆளாகியுள்ளனர். ஜார்கண்ட் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய 2 துணை காவல் ஆய்வாளர்கள், மூன்று கான்ஸ்டபிள்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

First published:

Tags: Holi Celebration, Jharkhand, Police, Viral Video