ஓசூர் கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது, துப்பு துலங்கியது எப்படி?

Youtube Video

ஓசூர் அருகே, வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

 • Share this:


  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நஞ்சாபுரத்தில் வீடு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் மத்திய பிரதேச மாநிலம் போலுக்காபுரா பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிர்கேஷ், அவரது அண்ணன் 25 வயதான ராஜ்குமார், 28 வயதான பிஜய் சிங் மற்றும் சில தொழிலாளர்கள் தங்கி வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், 6 தொழிலாளர்கள் நஞ்சாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பாகலூர் லிங்காபுரத்தைச் சேர்ந்த 22 வயதான பவன்குமார் மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொண்ட சாமனஹள்ளியைச் சேர்ந்த 44 வயதான முருகன் ஆகிய இரண்டு பேரும் நஞ்சாபுரம் பகுதியில் தாங்கள் வேலை செய்யும் பில்லப்பா என்பவரின் மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

  சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்களைப் பார்த்ததும் கண்டித்துள்ளனர். ஆனால் மதுபோதையில் இருந்த 6 பேரும் சேர்ந்து பவன்குமாரையும், முருகனையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து பவன்குமார் தனது செல்போன் மூலம் பில்லப்பாவுக்கு தகவல் தெரிவித்தார்.

  திண்டுக்கல்லில் பெண்கள், திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  பில்லப்பா, அவரது மகன் 24 வயதான மஞ்சுநாத், ஓசூரை அடுத்த மாவத்தூரை சேர்ந்த 23 வயதான அருள் ஆகிய 3 பேரும் அங்கு விரைந்து சென்றனர். பவன்குமார் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து, பிர்கேஷ், பிஜய்சிங், அரவிந்த் ஜாதவ், ராஜ்குமார் ஆகிய 4 பேரையும் சரமாரியாக இரும்புக் கம்பியால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

  இதில் பிர்கேசும், பிஜய்சிங்கும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; அரவிந்த் ஜாதவ், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, பவன்குமார், முருகன், பில்லப்பா, அவரது மகன் மஞ்சுநாத், அருண் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சாதாரணமாக தொடங்கிய வாய்த்தகராறு, அடிதடியில் சென்று, இறுதியில் இரட்டைக் கொலையில் முடிந்த சம்பவம், ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: