ஹோம் /நியூஸ் /இந்தியா /

இன்று தொடங்கும் 'ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0'! : ஃபிட்டாக மாற அழைப்புவிடும் அரசு !

இன்று தொடங்கும் 'ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0'! : ஃபிட்டாக மாற அழைப்புவிடும் அரசு !

ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0

ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0

ஃபிட் இந்தியா மிஷன், ‘ஃபிட் இந்தியா ப்ளாக் ரன்’ மூலம் தூய்மை இந்தியா பிரச்சாரத்துடன் இணைந்து, ஃபிட்னஸ் ஸ்வட்ச்தா எனும் வேடிக்கையான உடற்பயிற்சியின் வடிவத்தை உருவாக்கி உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

2019 ஆம் ஆண்டில் 150 ஆவது காந்தி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஃபிட் இந்தியா மிஷன் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. அதன் மூன்றாம் பாதிப்பு 'ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0' அக்டோபர் 2 தொடங்கி  31 வரை நடைபெற இருக்கிறது.

ஃபிட் இந்தியா மிஷன், உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும், நாட்டு மக்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பின் மூலம் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்துவதற்கான புதுமையான உடற்பயிற்சி பிரச்சாரங்களை தொடர்ந்து எடுத்து வருகிறது.

ஃபிட் இந்தியா மிஷன், ‘ஃபிட் இந்தியா ப்ளாக் ரன்’ மூலம் தூய்மை இந்தியா பிரச்சாரத்துடன் இணைந்து, ஃபிட்னஸ் ஸ்வட்ச்தா என்ற பெயரில் உடற்பயிற்சி விழிப்புணர்வை உருவாக்கி உள்ளது. இதன் நோக்கம் உடற்தகுதி, சோம்பல், மன அழுத்தம், பதற்றம், நோய்கள் போன்றவை நீங்க உதவுவது ஆகும்.

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் எதையெல்லாம் அனுமதிக்கிறது? யாருக்கெல்லாம் பொருந்தும் ?

கொரோனா பரவல் காலத்திலும் தனிமனித உடற்தகுதியின் அவசியத்தை புரியவைத்து மக்களை அதை நோக்கி பயணிக்க வைப்பதாகும்.

இந்த ஆண்டு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) முன்முயற்சியின் கீழ் 3வது பதிப்பை, அதாவது ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் 3.0 ஐ அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2022 வரை ஏற்பாடு செய்ய ஃபிட் இந்தியா மிஷன் முடிவு செய்துள்ளது.

எந்தவொரு வடிவத்திலும் 30 நிமிட உடல் தகுதி பயிற்சியை புகுத்தவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் சாதனைகளைக் கொண்டாடவும், இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டு நிறைவடைந்த மாபெரும் நிகழ்வில் ஆரோக்கியமாக இருக்க "ஆசாதி கே 75 சால், ஃபிட்னஸ் ரஹே பெமிசால்" - 75 ஆவது சுதந்திரஆண்டில் உடல்தகுதி பெறுவோம் என்ற உறுதிமொழி எடுக்கவும் குடிமக்கள் வலியுறுத்துகிறார்கள்.

பங்கேற்பு முறை:

  • மக்கள் தங்கள் விருப்பட்ட நேரத்தில் தங்கள் வீடுகளிலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து பதிவிட வேண்டும். கைமுறையாக அல்லது ஏதேனும் டிராக்கிங் ஆப் அல்லது ஜிபிஎஸ் வாட்சைப் பயன்படுத்தி உங்கள் கிமீகளைக் கண்காணிக்கவும்.

  • ஃபிட் இந்தியா போர்ட்டலில் ஒரு தனிநபராகவோ அல்லது அமைப்பாளராகவோ உங்கள் தகுதியின்படி அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயிற்சி நிகழ்வுகளை பதிவிடலாம்.
  • செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்து நிகழ்வை உருவாக்கும் போது பதிவேற்றவும்.
  • தனிநபராக https://fitindia.gov.in/freedom-run-3.0 போர்ட்டலில்  பதிவு செய்து, தங்கள் தரவைச் சமர்ப்பித்து சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Gandhi Jayanti, Mahatma Gandhi, Swach bharat