ஒருவொருக்கொருவர் தெரியாமல் இரண்டு பெண்களுடன் திருமணம்: உண்மை தெரிந்து கணவனை அடித்து துவைத்த மனைவிகள்

கணவரைத் தாக்கிய மனைவிகள்

ஒடிசாவில் இரண்டு பெண்களை ஒருவொருக்கொருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவரை இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

 • Share this:
  ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். அவர், சொந்தமாக ஆழ்துளை கிணறுக்கு துளையிடும் வண்டி வைத்துள்ளார். வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் வீட்டுக்கு வர முடியாது என்று மனைவியிடம் சொல்லியுள்ளார் பரசுராம். நாளுக்கு நாள் கணவரின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததால், கணவர் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறியதில் மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர், பரசுராம் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியவர், மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  பின்னர், முதல் மனைவி பரசுராமை பின் தொடர்ந்து சென்றுள்ளார். தெலங்கானா மாநிலத்திலுள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்திவருவது தெரியவந்துள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவனைப் பார்த்த மனைவி, இரண்டாவது மனைவியை அடிக்கப் பாய்ந்துள்ளார். விஷயத்தைக் கேட்டு இரண்டாவது மனைவி அழத் தொடங்கியுள்ளார். அப்போது இரண்டாவது மனைவிக்கும் பரசுராமுக்கு திருமணம் ஆன விவகாரம் தெரியாது என்பது முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

  பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமானது தனக்குத் தெரியாது என்று கூறி இரண்டாவது மனைவி அழுதுள்ளார். அதனையடுத்து, இரண்டு மனைவிகளும் சேர்ந்து பரசுராமை கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பரசுராமை கைது செய்தனர். அதுவரையில், இரண்டு மனைவிகளும் பரசுராமை அடித்து துவைத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: