1971-க்கு பிறகு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படை!

Surgical strikes 2.0 | தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது மிகுந்த ஆபத்து நிறைந்தது. எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காத வண்ணம் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்றாகும்.

1971-க்கு பிறகு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படை!
Surgical strikes 2.0 | தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது மிகுந்த ஆபத்து நிறைந்தது. எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காத வண்ணம் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்றாகும்.
  • News18
  • Last Updated: February 26, 2019, 11:04 AM IST
  • Share this:
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது கூட பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லாத இந்திய விமானப்படை தற்போது அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்ற நிலை நீடித்தே வந்தது.


Pulwama attack, புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.


இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தாக்குதல்


இதற்கிடையே, இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர், “இன்று காலை எல்லையிலிருந்து 3 மைல் தொலைவில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் அதனை விரட்டி அடித்தன.

அந்த நேரத்தில் வெடிகுண்டுகளை திறந்த வெளியில் இந்தியப்படைகள் வீசியுள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாக். ராணுவம் பகிர்ந்த புகைப்படங்கள்


புல்வாமா தாக்குதல் நடந்து 40 நாட்களுக்குப்பிறகு இந்திய விமானப்படை தனது அதிரடியை காட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலைமையில் அவசரக்கூட்டம் நடந்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த உரி தாக்குதலை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலின் போது இந்திய ராணுவம் தரை வழியாக பாகிஸ்தானில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. அப்போது, இலகுரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இன்றைய தாக்குதலில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாகும். தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது மிகுந்த ஆபத்து நிறைந்தது. எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காத வண்ணம் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்றாகும்.

1971-ம் ஆண்டு நடந்த இரு நாட்டு போரின் போது கடைசியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மிகவும் பெரிய போரான கார்கில் போரின் போது கூட விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழையவில்லை.

Also See...

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading