ஹோம் /நியூஸ் /இந்தியா /

First take 2022 : அபீர் இந்தியாவின் வருடாந்திர கலை திருவிழா..!

First take 2022 : அபீர் இந்தியாவின் வருடாந்திர கலை திருவிழா..!

கலை திருவிழா

கலை திருவிழா

அகமதாபாத்தில் நடந்து வந்த இந்த திருவிழா இம்முறை டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அபீர் இந்தியாவின் வருடாந்திர கலை திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி முதல் 18-ம் வரை டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 309 நகரங்களில் இருந்து 2,200 கலை படைப்புகளை அபீர் இந்தியா பெற்றுள்ளது. ஃபர்ஸ் டேக் 2022 ( First take 2022) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கலை திருவிழாவில் 148 இளம் இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளது.

  இந்த படைப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கலைஞர்கள் கொண்ட நடுவர் குழுவால் வெளிப்படையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நடுவர் குழுவில் ஜி.ஆர். இரன்னா, ஜெயராம் பொதுல், மனிஷா பரேக், மஞ்சுநாத் காமத் மற்றும் ரமேஷ் வேதன்பட்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  இந்த விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களில், சிறந்த 10 பேருக்கு அவர்களின் சிறந்த கருத்துக்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ் டேக் 2022 என்பது அபீர் இந்தியாவின் 6-வது ஆண்டு கலை திருவிழாவாகும். இதுவரை அகமதாபாத்தில் நடந்து வந்த இந்த திருவிழா இம்முறை டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  அபிர் இந்தியா பற்றி:

  அபிர் இந்தியா என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது இந்தியா முழுவதும் சமகால இந்திய கலை மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கிறது. இது 2016 ஆம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த கலைஞரான ரூபி ஜக்ருத் என்பவரால் நிறுவப்பட்டது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Delhi, India, Literature