ஹோம் /நியூஸ் /இந்தியா /

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.. அனைவரும் பயனடைவார்கள் என நிதீஷ் குமார் உறுதி!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.. அனைவரும் பயனடைவார்கள் என நிதீஷ் குமார் உறுதி!

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. அம்மாநிலத்தில் இந்த கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, முதல் கட்ட கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 12.70 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்களில் சுமார் 2.58 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாத இறுதிக்குள் முடக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MGNREGA பணியாளர்கள் என பலருக்கும் கடந்த மாதம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் தனிநபரின் வசிப்பிடம், சாதி அதன் உட்பிரிவு, மதம், வருமானம் உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்படவுள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தையும் இணையத்திலும் மொபைல் செயலியில் வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் புதிய தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயர் ஹீராபென் பெயர் சூட்டப்பட்டது

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறுகையில், "இது சாதி அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை மட்டுமல்லாது, அவர்களின் பொருளாதார நிலைமையையும் நமக்கு தெரியப்படுத்தும். இதன் மேலும் அடித்தட்டு மக்கள் மேம்பாடு உறுதி செய்யப்படும். அரசு அனைவருக்கான வளர்ச்சியையும் விரும்புகிறது. பாஜக ஏழைகளுக்கு எதிரான கட்சி. எனவே அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த விரும்பிவில்லை" என்றார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருவரும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

First published:

Tags: Bihar, Caste, Nitish Kumar