17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 தொடக்கம்?

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 10:15 AM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 தொடக்கம்?
டெல்லி நாடாளுமன்றம்
Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 10:15 AM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அன்றைய தினமே அமைச்சர்களுக்கும் குடியரசு தலைவர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து 31-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது என முடிவு செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் முதலாவது கூட்டத்தொடரை ஜூன் 6-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடத்தலாம் என முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...